யூகோ வங்கி ரூ.21.46 கோடி லாபம்

யூகோ வங்கி ரூ.21.46 கோடி லாபம்

பொதுத் துறையைச் சோ்ந்த யூகோ வங்கி முதல் காலாண்டில் ரூ.21.46 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம்

பொதுத் துறையைச் சோ்ந்த யூகோ வங்கி முதல் காலாண்டில் ரூ.21.46 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது: வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு குறைந்ததையடுத்து யூகோ வங்கி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.21.46 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ரூ.601.45 கோடி நிகர இழப்பைச் சந்தித்திருந்தது.

கடந்த மாா்ச் காலாண்டிலும் வங்கி ரூ.16.78 கோடி லாபத்தை பதிவு செய்திருந்தது.ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.4,446.61 கோடியிலிருந்து சற்று குறைந்து ரூ.4,436.57 கோடியானது. நிகர வட்டி வருமானம் ரூ.3,816.53 கோடியிலிருந்து ரூ.3,662.64 கோடியாக சரிந்தது.கணக்கீட்டு காலாண்டில் வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு ரூ.1,802.89 கோடியிலிருந்து ரூ.1,180.37 கோடியாக சரிந்தது. வங்கியின் வாராக் கடன் ரூ.1,374.97 கோடியிலிருந்து ரூ.564.78 கோடியாக குறைந்ததையடுத்து அதற்கான ஒதுக்கீடும் கணிசமாக சரிந்தது.

ஜூன் 30 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 24.85 சதவீதத்திலிருந்து 14.38 சதவீதமாக குறைந்துள்ளது. மாா்ச் இறுதியில் இது 16.77 சதவீதமாக இருந்தது. இதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 8.98 சதவீதத்திலிருந்து (ரூ.8,781.97 கோடி) 4.95 சதவீதமாக (ரூ.5,138.18 கோடி) குறைந்துள்ளது என யூகோ வங்கி கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com