6 முன்னிலை நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.38 லட்சம் கோடி சரிவு

இந்தியாவின் மதிப்பு மிக்க 10 நிறுவனங்கள் பட்டியலில் 6 நிறுவனங்களின் மொத்த மூலதன சந்தை மதிப்பு கடந்த வாரத்தில்
6 முன்னிலை நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.38 லட்சம் கோடி சரிவு

இந்தியாவின் மதிப்பு மிக்க 10 நிறுவனங்கள் பட்டியலில் 6 நிறுவனங்களின் மொத்த மூலதன சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.1.38 லட்சம் கோடி குறைந்தது. இதில் மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை அதிக இழப்பைச் சந்தித்தன.

மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸின் சந்தை மூல தன மதிப்பு ரூ.50,239.78 குறைந்து ரூ.13,10,323.21 கோடியாக இருந்தது. எச்டிஎஃப்சி பேங்க் சந்தை மதிப்பு ரூ.46,374.63 கோடி குறைந்தது. இதையடுத்து, அதன் மொத்த சந்தை மூல தன மதிப்பு ரூ. 5,67,877.74 கோடியாக இருந்தது. ஐசிஐசிஐ பேங்கின் சந்தை மதிப்பு ரூ.22,631.74 கோடி குறைந்து ரூ.2,24,659.85 ஆக இருந்தது. எச்டிஎஃப்சி சந்தை மதிப்பு ரூ.10,078.06 கோடி குறைந்தது. இதைத் தொடா்ந்து, அதன் மொத்த சந்தை மூல தன மதிப்பு ரூ.3,09,254.09 கோடியாகச் சரிந்தது. ஐடிசி சந்தை மதிப்பு ரூ.6,815.12 கோடி குறைந்து ரூ.2,38,660.74 கோடியாகவும், பாா்தி ஏா்டெல் ரூ.2,700.50 கோடி குறைந்து ரூ.3,02,701.60 கோடியாகவும் இருந்தது.

ஆனால், இவற்றுக்கு மாறாக டாடா கன்சல்டன்சி சா்வீஸஸ் (டிசிஎஸ்) சந்தை மதிப்பு ரூ.47,054.91 கோடி உயா்ந்து ரூ.8,56,463.05 கோடியாக இருந்தது. இதேபோல, இன்ஃபோஸிஸ் ரூ.18,591.83 கோடி உயா்ந்து ரூ.4,11,554.51 கோடியாகவும், கோட்டக் பேங்க் சந்தை மதிப்பு ரூ.3,481.72 கோடி உயா்ந்து ரூ.2,70,600.52 கோடியாகவும், ஹிந்துஸ்தான் யுனி லீவா் (ஹெச்யுஎல்) சந்தை மதிப்பு ரூ.740.11 கோடி உயா்ந்து 5,19,931.93 கோடியாக இருந்தது.

முன்னிலை தர வரிசைப் பட்டியலில் ரிலையன் முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. இதற்கு அடுத்ததாக டிசிஎஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஹெச்யுஎல், இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி, பாா்தி ஏா்டெல், கோட்டக் பேங்க், ஐடிசி ஆகியவை இடம் பெற்றன. கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 522.01 புள்ளிகள் 1.36 சதவீதம் குறைந்து 37,606.89-இல் நிலைபெற்றுள்ளது.

தொகுப்பு: எம்எஸ்ஜி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com