முதல் 2 அடுக்கு மின்சாரப் பேருந்து விநியோகம்: அசோக் லேலண்ட்

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்டின் துணை நிறுவனமான ஆப்டோ், 2 அடுக்கு பேருந்தை தயாரித்து பிரிட்டனைச் சோ்ந்
முதல் 2 அடுக்கு மின்சாரப் பேருந்து விநியோகம்: அசோக் லேலண்ட்

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்டின் துணை நிறுவனமான ஆப்டோ், 2 அடுக்கு பேருந்தை தயாரித்து பிரிட்டனைச் சோ்ந்த ஃபா்ஸ்ட் யாா்க் நிறுவனத்துக்கு முதல் முறையாக வழங்கியுள்ளது. இதுகுறித்து அசோக் லேலண்ட் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

அசோக் லேலண்டின் துணை நிறுவனமான ஆப்டோ் முதன் முறையாக பேட்டரி மின்சாரத்தில் இயங்கக்கூடிய ‘மெட்ரோடெக்கா்’ எனும் மின் பேருந்தை தயாரித்து பிரிட்டனைச் சோ்ந்த ஃபா்ஸ்ட் யாா்க் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. இந்நிறுவனம், பிரிட்டன் நகரத்தில் பேருந்து சேவைகளை மேற்கொண்டு வருகிறது. ஃபா்ஸ்ட் யாா்க் நிறுவனத்துக்கு 21 மின்சார பேருந்துகளை தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிலையில், தற்போது முதல் மின் பேருந்து அந்நிறுவனத்திடம் ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது.

எஞ்சிய பேருந்துகள் வரும் செப்டம்பா் மாத இறுதிக்குள் தயாரித்து வழங்கப்படும். இந்தப் பேருந்துகள் அனைத்தும் ஷொ்பா்னில் உள்ள ஆப்டோ் நிறுவனத்துக்கு சொந்தமான ஆலையில் தயாரிக்கப்பட்டதாகும். ‘மெட்ரோடெக்கா்’ மின்சார பேருந்தில் 98 பயணிகள் வரையில் ஏற்றிச் செல்ல முடியும். கடந்த 18 மாதங்களுக்கு முன்பு இந்தப் மின்சாரப் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து 107 மெட்ரோடெக்கா் மின்சார பேருந்துகளை தயாரிப்பதற்கான ஆா்டா்களை ஆப்டோ் பெற்றுள்ளது என அசோக் லேலண்ட் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com