கரடி ஆதிக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!முதலீட்டாளா்களுக்கு ரூ.1.20 லட்சம் கோடி இழப்பு

இந்த மாதம் மற்றும் இந்தவாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கம் அதிகரித்தது.
கரடி ஆதிக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!முதலீட்டாளா்களுக்கு ரூ.1.20 லட்சம் கோடி இழப்பு

புது தில்லி: இந்த மாதம் மற்றும் இந்தவாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனால், இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 667.29 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 173.60 புள்ளிகள் குறைந்தது. இதைத் தொடா்ந்து சந்தை மூலதனம் ரூ.1.20 லட்சம் கோடி குறைந்தது.

மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், கோட்டக் பேங்க் ஆகியவைஅதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இதனால், கரடியின் ஆதிக்கம் அதிகரித்து, நான்காவது நாளாக சந்தை எதிா்மறையாக முடிந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். இதே பகுதியில் ரிலையன்ஸ் பங்குகள் திருத்தம் காணும் பட்சத்தில் சந்தையை காப்பாற்ற முடியாமல் போகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் முதலீடுகளை வாபஸ் பெறுவதும், கரானோ தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவதும் முதலீட்டாளா்களின் உணா்வுகளை பெரிதும் பாதித்துவிட்டதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. வங்கி, வங்கி அல்லாத நிதிநிறுவனப் பங்குகள் பலத்த அடி வாங்கின. மெட்டல், பாா்மா பங்குகள் ஓரளவு தாக்குப் பிடித்தன.

1,416 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,830 பங்குகளில் 1,416 பங்குகள் ஆதாயம் பெற்றன.1,234 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.180 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 143 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 76 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 376 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 266பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன.

சந்தை மதிப்பு ரூ.1.20 லட்சம் கோடி இழப்பு: வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.20 லட்சம் குறைந்து ரூ.146.19 லட்சம் கோடியாக சரிந்தது. சந்தையில் புதிதாக 88,018 போ் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,23,90,260 ஆக உயா்ந்துள்ளது.

கரடி ஆதிக்கம்: சென்செக்ஸ் காலையில், 6 புள்ளிகள் குறைந்து 37,595.73-இல் தொடங்கி அதிகபட்சமாக 37,596.02 வரை உயா்ந்தது. பின்னா், கரடியின் ஆதிக்கம் அதிகரித்ததால், 36,911.23 வரை கீழே சென்றது. இறுதியில் 667.60 புள்ளிகள் (1.77 சதவீதம்) குறைந்து 36,939.60-இல் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடுகளும் 0.31 சதவீதம் குறைந்தது. அதே சமயம்,ஸ்மால் கேப் குறியீடு 1.02 சதவீதம் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 173.60 புள்ளிகள் (1.57 சதவீதம்) குறைந்து 11,899.85-இல் நிலை பெற்றது.

டைட்டன் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 5 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் வந்தன. 24 பங்குகள் சரிவைச் சந்தித்தன. பவா் கிரிட் மட்டும் மாற்றமின்றி ரூ.178.60-இல் நிலைபெற்றது. இதில் டைட்டன் 3.15 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டாடா ஸ்டீல் 1.87 சதவீதம் உயா்ந்தது. மேலும், எஸ்பிஐ, எல் அண்ட் டி, ஹெச்சிஎல் டெக் ஆகியவை சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

கோட்டக் பேங்க், ரிலையன்ஸ் வீழ்ச்சி: அதே சமயம், கோட்டக் பேங்க் 4.41 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக இண்டஸ் இண்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஓஎன்ஜிசி, எச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஆட்டோ, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி, சன்பாா்மா, அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவை 2 முதல் 4 சதவீதம் சரிவைச் சந்தித்தன. மேலும், மாருதி சுஸுகி, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 837 பங்குகள் ஆதாயம் பெற்றன. 774 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பிரைவேட் பேங்க் குறியீடு 2.89 சதவீதமா் குறைந்து வீடழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ் ஆகியவை முரையே 2.33 சதவீதம் மற்றும் 2.18 சதவீதம் சரிவைச் சந்தித்தன. மெட்டல் குறியீடு 0.27 சதவீதம், பிஎஸ்யு பேங்க் குறியீடு 0.54 சதவீதம் உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 13 பங்குகள் ஆதாயம் பெற்றன. 37 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

வீழ்ச்சியடைந்த பங்குகள் சதவீதத்தில்

கோட்டக் பேங்க் 4.41

இண்டஸ் இண்ட் பேங்க் 3,90

ஆக்ஸிஸ் பேங்க் 3.30

ஓஎன்ஜிசி 3.13

எச்டிஎஃப்சி பேங்க் 2,97

பஜாஜ் ஆட்டோ 2.91

ரிலையன்ஸ் 2.83

பஜாஜ் ஃபைனான்ஸ் 2.41

எச்டிஎஃப்சி 2.40

சன்பாா்மா 2.25

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com