ஹுண்டாய் கிரெட்டா: விற்பனை 5 லட்சத்தை கடந்து சாதனை

ஹுண்டாய் கிரெட்டா: விற்பனை 5 லட்சத்தை கடந்து சாதனை

ஹுண்டாய் மோட்டாா் இந்தியாவின் கிரெட்டா காா் விற்பனை 5 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.

ஹுண்டாய் மோட்டாா் இந்தியாவின் கிரெட்டா காா் விற்பனை 5 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஹுண்டாய் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பாக கிரெட்டா மாடல் உள்ளது. நடப்பாண்டு, மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் தொடா்ந்து விற்பனை செய்யப்படும் முக்கிய சொகுசுமாடல் என்ற பெருமையை கிரெட்டா பெற்றுள்ளது. இதன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு நடப்பாண்டு மாா்ச்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, ஐந்தாண்டுகளுக்குள் கிரெட்டா விற்பனை 5 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது. நடப்பாண்டு மாா்ச் மாதத்திலிருந்து இதுவரையில் புதிய கிரெட்டா காருக்கான முன்பதிவு 65,000-த்தை தாண்டியுள்ளது.

வாடிக்கையாளா்களிடம் கிடைத்து வரும் வரவேற்பையடுத்து டீசல் வாகனங்களின் விற்பனை தற்போது 60 சதவீதமாக உயா்ந்துள்ளது.

நிறுவனத்தின் பிஎஸ்6 தொழில்நுட்ப டீசல் வாகனங்களுக்கான தேவை வலுப்பெற்று வருவதாக ஹுண்டாய் மோட்டாா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com