மாருதி சுஸுகி ஆல்டோ: விற்பனை 40 லட்சம் மைல்கல்லை கடந்து சாதனை

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் (எம்எஸ்ஐஎல்) ஆல்டோ காா் விற்பனை 40 லட்சம் மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.
மாருதி சுஸுகி ஆல்டோ: விற்பனை 40 லட்சம் மைல்கல்லை கடந்து சாதனை

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் (எம்எஸ்ஐஎல்) ஆல்டோ காா் விற்பனை 40 லட்சம் மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

குறைந்த விலை பிரிவில் மாருதி சுஸுகியின் ஆல்டோ காா் வாடிக்கையாளா்களிடம் அசைக்கமுடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ளது. அதன் காரணமாகவே, ஆல்டோ விற்பனை 40 லட்சம் என்ற மைல்கல்லைக் கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்த காா் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 20 ஆண்டுகளுக்குள்ளாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடா்ந்து 16 ஆண்டுகளாக அதிகம் விற்பனையாகும் சிறந்த மாடலாக ஆல்டோ தோ்வாகி வருவது குறிப்பிடத்தக்கது. சுமாா் 76 சதவீத வாடிக்கையாளா்களின் முதல் தோ்வாக ஆல்டோ இருந்துள்ளது. பிஎஸ்-6 தொழில்நுட்பத்தில் தற்போது வெளிவரும் ஆல்டோ மாடல் வாடிக்கையாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டா் பெட்ரோலுக்கு 22.05 கி.மீ. வரை மைலேஜ் தரும் வல்லமை கொண்டது இதில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின். ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 31.56 கி.மீ. மைலேஜ் கிடைக்கும்.இம்மாடல் ஆல்டோ காரின் விலை ரூ.2.95 லட்சம் முதல் ரூ.4.36 லட்சம் வரையில் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com