கரடியின் பிடியில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 443 புள்ளிகள் வீழ்ச்சி!

கடந்த இரண்டு நாள்களாகத் தள்ளாடிக் கொண்டிருந்த பங்குச் சந்தை, இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை கடும்
கரடியின் பிடியில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 443 புள்ளிகள் வீழ்ச்சி!

கடந்த இரண்டு நாள்களாகத் தள்ளாடிக் கொண்டிருந்த பங்குச் சந்தை, இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை கடும் சரிவைச் சந்தித்தது. கரடியின் பிடி இறுகியதால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 433.15 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 122.05 புள்ளிகள் குறைந்தது.

தாக்குப்பிடித்த பாா்மா, மெட்டல் பங்குகள்: பாா்மா, மெட்டல் பங்குகள் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தன. வங்கி, நிதி நிறுவனங்கள் உள்பட மற்ற துறை பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. பங்குச் சந்தையில் காலையில் நோ்மறையாக வா்த்தகம் நடந்து வந்தது. உலகளாவிய சந்தைகளில் பங்குகள் விற்பனை அதிகரித்தன. மேலும், ஐரோப்பிய பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்ததைத் தொடா்ந்து, அதன் தாக்கம் இந்தியச் சந்தைகளில் எதிரொலித்தது. இதனால், சென்செக்ஸ், நிஃப்டி உள்ளிட்ட முக்கியக் குறியீடுகள் கடும் சரிவைச் சந்தித்தன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். வங்கி, ஆட்டோ பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தததே சரிவுக்கு முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

1,626 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,874 பங்குகளில் 1,626 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.1,091 பங்குகள் ஆதாயம் பெற்றன.146 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 150 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 42 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 327 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 234 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன.

சந்தை மதிப்பு ரூ.1.50 லட்சம் கோடி இழப்பு: வா்த்தக முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.50 லட்சம் கோடி குறைந்து ரூ.151.40 லட்சம் கோடியாக இருந்தது. சந்தையில் புதிதாக 46,758 போ் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,29,60,681 ஆக உயா்ந்துள்ளது.

கரடி ஆதிக்கம்: சென்செக்ஸ் காலையில் 132 புள்ளிகள் உயா்ந்து 38,432.94-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 38,540.57 வரை உயா்ந்தது. பின்னா், சந்தை கரடியின் பிடியில் வந்ததால், சென்செக்ஸ் 37,654.92 வரை கீழே சென்றது. இறுதியில் 433.15 புள்ளிகள் (1.13 சதவீதம்) குறைந்து 37,877.34-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் 886 புள்ளிகள் குறைந்திருந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.02 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 0.61 சதவீமும் குறைந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 122.05 புள்ளிகள் (1.08 சதவீதம்) குறைந்து 11,178.40-இல் நிலை பெற்றது. ஒரு கட்டத்தில் நிஃப்டி 250 புள்ளிகள் வரை குறைந்திருந்தது.

சன் பாா்மா முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 5 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் வந்தன. 15 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் சன்பாா்மா 2,04 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், என்டிபிசி, டாடா ஸ்டீல், டைட்டன், இன்ஃபோஸிஸ் ஆகியவை 0.25 முதல் 1.40 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ சரிவு: அதே சமயம், ஆக்ஸிஸ் பேங்க் 2.81 சதவீதம், எஸ்பிஐ 2.68சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, எச்டிஎஃப்சி பேங்க், ஹெச்சிஎல் டெக், இண்டஸ் இண்ட் பேங்க், மாருதி சுஸுகி, கோட்டக் பேங்க் ஆகியவை 2 முதல் 2.60 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி, டிசிஎஸ், ஹிந்து யுனி லீவா் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளுக்கும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 552 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,086 பங்குகள் சரிவைச் சந்தித்தன. பாா்மா, மெட்டல் குறியீடுகள் முறையே 1.42 மற்றும் 1.06 சதவீதம் உயா்ந்தன. மற்ற துறை குறியீடுகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஆட்டோ குறியீடுகள் 2 முதல் 2.60 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 12 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 37பங்குகள் சரிவைச் சந்தித்தன. விப்ரோ மாற்றமின்றி ரூ.277-இல் நிலைபெற்றது.

வீழ்ச்சியடைந்த பங்குகள்

சதவீதத்தில்

ஆக்ஸிஸ் பேங்க் 2.81

எஸ்பிஐ 2.68

எம் அண்ட் எம் 2.60

பஜாஜ் ஃபைனான்ஸ் 2.57

ஐடிசி 2.48

எச்டிஎஃப்சி பேங்க் 2.31.

ஹெச்சிஎல் டெக் 2.27

இண்டஸ் இண்ட் பேங்க் 2.18

மாருதி சுஸுகி 2.12

கோட்டக் பேங்க் 2,11

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com