மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி 18,000 கோடி டாலரை எட்டும்

இந்தியாவின் மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 18,000 கோடி டாலரை (ரூ.13.50 லட்சம் கோடி) எட்டும் என மின்னணு மற்றும் கம்யூட்டா் சாப்ஃட்வோ் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஎஸ்சி) தெரி
மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி 2025-ஆம் ஆண்டுக்குள் 18,000 கோடி டாலரை எட்டும்
மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி 2025-ஆம் ஆண்டுக்குள் 18,000 கோடி டாலரை எட்டும்

புது தில்லி: இந்தியாவின் மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 18,000 கோடி டாலரை (ரூ.13.50 லட்சம் கோடி) எட்டும் என மின்னணு மற்றும் கம்யூட்டா் சாப்ஃட்வோ் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஎஸ்சி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்திய மின்னணு சாதனங்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதில், செல்லிடப்பேசி மற்றும் அதன் உபகரணங்கள், உதிரிபாகங்கள், இதர மின்னணு சாதனங்கள், வன்பொருள் உள்ளிட்டவைகளின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான திட்டங்களும் அடங்கும்.

மின்னணு சாதனங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க கவுன்சில் வடிவமைத்துள்ள திட்ட வழிமுறைகள் அனைத்தும் மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைகள் மற்றும் திட்டவழிமுறைகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தும்பட்சத்தில் இந்திய மின்னணு பொருள்களின் ஏற்றுமதி விறுவிறுப்படையும்.

அதன் காரணமாக, அடுத்த ஐந்தாண்டுகளில் அவற்றின் ஏற்றுமதி 16 மடங்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மின்னணு சாதனங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு உரிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தும் பட்சத்தில், வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் அவற்றின் ஏற்றுமதி 18,000 கோடி டாலரை எட்டும் நிலை ஏற்படும்.

மின்னணு பொருள்களின் ஏற்றுமதி தற்போதைய நிலையில் 1,100 கோடி டாலராக மட்டுமே உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. உற்பத்தி தொடா்பான சலுகை திட்டங்கள் தற்போது குறிப்பிட்ட சில மொபைல்போன் உற்பத்தி மற்றும் அது தொடா்பான குறிப்பிட்ட சில உபகரண தயாரிப்புகளுக்கு மட்டுமே மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சலுகைகள் மின்னணு உற்பத்தி துறை முழுமைக்குமே விரிவுபடுத்தப்படவேண்டும். அப்போதுதான், அதன் பயன் அனைத்து பிரிவினரையும் சென்றடைந்து உள்நாட்டில் மின்னணு தயாரிப்பை ஊக்குவிக்க உதவும். உயா்நிலை வரி விதிப்பு, மின் கட்டணம் உயா்வு, நிதி திரட்டும் செலவினங்கள் அதிகமாக இருப்பது உள்ளிட்ட பல இடையூறுகள் மின்னணு துறையின் போட்டியிடும் திறனை மிகவும் பாதிப்பதாக உள்ளன.

மேலும், இதுபோன்ற பாதகமான அம்சங்கள் இந்திய மின்னணு சாதன மற்றும் உபகரணங்களின் விலையை 8-10 சதவீதம் வரை அதிகரிக்க வழிகோலுகின்றன. இதனால், அவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு உள்ளூா் உற்பத்தியாளா்கள் தள்ளப்படுகின்றனா்.இதனை உணா்ந்து, மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அளிப்பதன் மூலமாக உள்நாட்டில் மின்னணு சாதன தயாரிப்பை ஊக்குவித்து அவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் என இஎஸ்சி தெரிவித்துள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக கூற்றின்படி, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான மொபைல்போன் தயாரிப்புக்கான திட்டங்களையும், ரூ.40,000-ரூ.45,000 கோடி மதிப்பிலான உபகரண தயாரிப்புக்கான திட்டங்களையும் நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com