கூகுள் மீட், டியோ: 2020-ல் ஒரு லட்சம் கோடி நிமிடங்களுக்கு விடியோ அழைப்புகள்

2020-ஆம் ஆண்டு மட்டும் கூகுள் மீட், கூகுள் டியோ செயலிகள் மூலம் ஒரு லட்சம் கோடி நிமிடங்களுக்கும் மேலான விடியோ அழைப்புகள் பதிவாகியுள்ளன. இது 18 ஆயிரம் கோடி மணி நேரத்திற்கு சமமானது.
2020-ஆம் ஆண்டு மட்டும் கூகுள் மீட், கூகுள் டியோ செயலிகள் மூலம் ஒரு லட்சம் கோடி நிமிடங்களுக்கும் மேலான விடியோ அழைப்புகள்
2020-ஆம் ஆண்டு மட்டும் கூகுள் மீட், கூகுள் டியோ செயலிகள் மூலம் ஒரு லட்சம் கோடி நிமிடங்களுக்கும் மேலான விடியோ அழைப்புகள்


2020-ஆம் ஆண்டு மட்டும் கூகுள் மீட், கூகுள் டியோ செயலிகள் மூலம் ஒரு லட்சம் கோடி நிமிடங்களுக்கும் மேலான விடியோ அழைப்புகள் பதிவாகியுள்ளன. இது 18 ஆயிரம் கோடி மணி நேரத்திற்கு சமமானது.

பயனர்களுக்கு விடியோ தொலைத்தொடர்பு சேவை வழங்கும் வகையில் கூகுள் நிறுவனத்தால் கூகுள் மீட் மற்றும் கூகுள் டியோ செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

கரோனா பெருந்தொற்றால் உலகளவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்களிடையே விடியோ அழைப்புகளின் தேவை அதிகரித்தது. அதன்படி கூகுள் மீட், கூகுள் டியோ செயலிகள் மூலம் 2020-ம் ஆண்டு ஒரு லட்சம் கோடி நிமிடங்களுக்கும் அதிகமான விடியோ அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், ஊரடங்கில் விடுமுறை நாள்களை மகிழ்ச்சியாக கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு மின்னஞ்சல் கணக்கிற்கும் அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை வரம்பற்ற விடியோ அழைப்புகளை வழங்குவதாக கூகுள் அறிவித்துள்ளது. 

2020-ஆம் ஆண்டு மீட் எனும் விடியோ அழைப்பு வசதியை மின்னஞ்சலுடன் கூகுள் நிறுவனம் இணைத்தது. இதன் மூலம் பயனர்களால் எளிதாக மின்னஞ்சலிலிருந்து விடியோ அழைப்பிற்கு செல்ல இயலும்.

பயனர்கள் எந்தவித இடையூறுமின்றி வசதியாகவும், நடந்துகொண்டும் பேசும் வகையில் 'நெஸ்ட் ஹப் மேக்ஸ்' என்ற மேம்பட்ட வசதி கொடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் மீட் மற்றும் கூகுள் டியோ தயாரிப்பு மேலாண்மை இயக்குநர் டேவ் சிட்ரோன் தெரிவித்துள்ளார்.

பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அழைப்பு விவரங்களை பாதுகாக்கும் வகையில் கூகுள் மீட் மற்றும் டியோ உருவாக்கப்பட்டுள்ளன.

கூகுள் செயலிகளை நாள்தோறும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டியுள்ளது. அதிகபட்சமாக ஒரே நாளில் 235 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இது குறித்து கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறுகையில், ஜனவரி மாதம் முதல் 30 மடங்கு பயன்பாட்டை நிறுவனம் அதிகரித்துள்ளதாகக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com