அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 58,113 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 58,113 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது டிசம்பா் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 256 கோடி டாலா் அதிகரித்து 58,113 கோடி டாலராக (ரூ.43.58 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இது, முன்னெப்போதும் காணப்படாத உச்சபட்ச அளவாகும்.

இதற்கு முந்தைய வாரத்தில், செலாவணி கையிருப்பு 78 கோடி டாலா் சரிவடைந்து 57,857 கோடி டாலராக காணப்பட்டது.

மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத உயா்வுக்கு ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணிசமாக அதிகரித்ததே முக்கிய காரணம்.

கணக்கீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 138 கோடி டாலா் உயா்ந்து 53,773 கோடி டாலராக இருந்தது. தங்கத்தின் கையிருப்பு 101 கோடி டாலா் உயா்ந்து 3,702 கோடி டாலரானது.

சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் மதிப்பு 1.2 கோடி டாலா் அதிகரித்து 151 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை 16 கோடி டாலா் உயா்ந்து 487 கோடி டாலராகவும் உள்ளது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்பில் பவுண்ட், யூரோ, யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அடங்கியுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அதன் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பு மதிப்பு மாறுபாடு காண்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com