டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லாபம் ரூ.78 கோடி

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆப் இந்தியா (டிஐஐ) நிறுவனம் மூன்றாவது காலாண்டில் தனிப்பட்ட முறையில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.78.27 கோடியை ஈட்டியுள்ளது.
டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லாபம் ரூ.78 கோடி

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆப் இந்தியா (டிஐஐ) நிறுவனம் மூன்றாவது காலாண்டில் தனிப்பட்ட முறையில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.78.27 கோடியை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் டிஐஐ நிறுவனத்தின் தனிப்பட்ட மொத்த வருவாய் ரூ.992.77 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,375.41 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

தனிப்பட்ட நிகர லாபம் ரூ.77.25 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.78.27 கோடியானது.

கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2019 டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாத காலத்தில் நிறுவனத்தின் தனிப்பட்ட மொத்த வருவாய் ரூ.4,112.52 கோடியிலிருந்து குறைந்து ரூ.3,382.04 கோடியானது. தனிப்பட்ட நிகர லாபம் ரூ.188.44 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.256.99 கோடியானது.

மூன்றாவது காலாண்டில் டிஐஐ நிறுவனம் ஒட்டுமொத்த அளவில் ஈட்டிய வருவாய் மூன்றாவது காலாண்டில் ரூ.1,458 கோடியிலிருந்து குறைந்து ரூ.1,087 கோடியானது. ஒட்டுமொத்த வரிக்கு பிந்தைய லாபம் ரூ.65 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.82 கோடியானது என டிஐஐ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com