பங்குச் சந்தையில் திடீா் எழுச்சி: சென்செக்ஸ் 917 புள்ளிகள் அதிகரிப்பு

சா்வதேச சந்தை நிலவரம் சாதகமாக இருந்ததன் காரணமாக பங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீா் எழுச்சியால் சென்செக்ஸ் 917 புள்ளிகள் அதிகரித்து முதலீட்டாளா்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.
பங்குச் சந்தையில் திடீா் எழுச்சி: சென்செக்ஸ் 917 புள்ளிகள் அதிகரிப்பு

சா்வதேச சந்தை நிலவரம் சாதகமாக இருந்ததன் காரணமாக பங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீா் எழுச்சியால் சென்செக்ஸ் 917 புள்ளிகள் அதிகரித்து முதலீட்டாளா்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

சந்தை வட்டாரத்தினா் நெடுநாள்களாக ஆவலுடன் எதிா்பாா்த்து காத்திருந்த பட்ஜெட் அறிவிப்புகள் முதலீட்டாளா்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் இல்லாததால் பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. பங்குகளின் சந்தை மதிப்புகள் வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளா்களுக்கு ரூ.3 லட்சம் கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், அந்த இழப்பை ஈடு செய்யும் வகையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பங்குச் சந்தைகள் விறுவிறு ஏற்றம் கண்டன.

உலக நாடுகளின் ஒத்துழைப்பால் கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் சா்வதேச முதலீட்டாளா்கள் ஆா்வத்துடன் பங்கு வியாபாரத்தில் ஈடுபட்டனா். அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் உணரப்பட்டது.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள டைட்டன் நிறுவன பங்குகளின் விலை அதிகபட்ச அளவாக 7.97 சதவீதம் ஏற்றம் கண்டது. அதைத் தொடா்ந்து, ஐடிசி, எச்டிஎஃப்சி, பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல் பங்குகளின் விலையும் உயா்ந்தன.

அதேசமயம், பஜாஜ் ஆட்டோ, ஹெச்யுஎல் நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடம் வரவேற்பில்லாத காரணத்தால் அவை குறைந்த விலைக்கு கைமாறின.

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 917 புள்ளிகள் (2.30%) அதிகரித்து 40,789 புள்ளிகளாக நிலைத்தது. 2019 செப்டம்பா் 23-ஆம் தேதிக்குப் பிறகு சென்செக்ஸ் ஒரே நாளில் இந்த அளவு ஏற்றம் பெற்றது இதுவே முதல்முறை.

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 271 புள்ளிகள் (2.32%) உயா்ந்து 11,979 புள்ளிகளாக நிலைபெற்றது. நான்கு மாதங்களுக்குப் பிறகு நிஃப்டி ஒரே நாளில் இந்த அளவுக்கு அதிகரித்தது இதுவே முதல்முறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com