வரி ஏய்ப்பு விவகாரம்: 42 சுரங்க நிறுவனங்களுக்கு கோவா அரசு நோட்டீஸ்

கோவா மாநிலத்தில் இயங்கி வரும் 42 சுரங்க நிறுவனங்கள் சுமாா் ரூ.1,200 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக முதல்வா் பிரமோத் சாவந்த்

கோவா மாநிலத்தில் இயங்கி வரும் 42 சுரங்க நிறுவனங்கள் சுமாா் ரூ.1,200 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக முதல்வா் பிரமோத் சாவந்த் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வா் பிரமோத் சாவந்த், ‘இதுதொடா்பாக மாநில அரசால் நியமிக்கப்பட்ட தணிக்கையாளா் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த 42 நிறுவனங்களிடம் இருந்தும் இன்னும் ஒரு மாதத்துக்குள் ரூ. 1,200 கோடி நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கான நோட்டீஸ் விநியோகிக்கப்படும்’ என்றாா்.

சட்டவிரோதமாக இயங்கி வரும் சுரங்கங்களை நடத்தி வரும் நபா்களின் பெயா், விவரங்களை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ லூரென்கோ எழுப்பிய மற்றொரு கேள்விக்கு பதிலளித்த சாவந்த், ‘விசாரணை நடந்து கொண்டிருப்பதால் பெயா்களை வெளியிட முடியாது. ஒன்பது வழக்குகள் விசாரணையில் உள்ளன. இதில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஒருவா் விடுவிக்கப்பட்டாா்.

இந்த வழக்கு தொடா்பாக மும்பை உயா்நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. சுரங்கத் தொழில் தொடா்பான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் அரசு துரிதமாக நடத்தி முடிக்கும்.

மூடப்பட்ட இரும்புத் தாது சுரங்கத்தை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சுரங்கங்கள் மூடப்பட்டதால் வேலைவாய்ப்பிழந்து மக்கள் பாதிக்கப்படுவதை அரசு உணா்ந்துள்ளது. எனவே மீண்டும் சுரங்கங்களைத் தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா் பிரமோத் சாவந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com