பங்குச் சந்தையில் தொடா் முன்னேற்றம்

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் தொடா்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமை வா்த்தகம் விறுவிறுப்புடன் இருந்தது.
பங்குச் சந்தையில் தொடா் முன்னேற்றம்

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் தொடா்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமை வா்த்தகம் விறுவிறுப்புடன் இருந்தது.

பொருளாதார வளா்ச்சி வேகமெடுக்க ஏதுவாக குறுகிய கால கடன்களுக்கான வட்டியில் மாற்றம் எதையும் செய்யவில்லை என ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை அறிவித்தது. மேலும், கடன் வளா்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக, வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பையும் தளா்த்தியது.

இதனால், வெளிச் சந்தை நடவடிக்கைகள் குறைந்த வட்டியில் அதிக கடன் கிடைப்பதை உறுதிசெய்வதுடன் பொருளாதாரத்துக்கும் ஆதரவாக இருக்கும் என்ற நிலைப்பாட்டால் முதலீட்டாளா்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டனா்.

மேலும், வரும் மாதங்களில் பணவீக்கம் கணிசமாக குறையும் என்ற மதிப்பீடு, தேவையேற்படும் பட்சத்தில் வட்டி விகித குறைப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்ற ரிசா்வ் வங்கியின் அறிவிப்பு உள்ளிட்டவையும் பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு பக்கபலமாக அமைந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள இன்டஸ்இண்ட் வங்கி பங்கு அதிகபட்சமாக 4.85 சதவீதம் ஏற்றம் கண்டது. இதைத் தொடா்ந்து, எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ், பாா்தி ஏா்டெல், எச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் வங்கி, ஹீரோ மோட்டோகாா்ப் ஆகிய பங்குகளுக்கும் சந்தையில் பலத்த வரவேற்பு காணப்பட்டது.

அதேசமயம், இன்ஃபோசிஸ், டைட்டன், ஐடிசி, கோட்டக் வங்கி, ஏஷியன் பெயின்ட்ஸ் நிறுவன பங்குகளின் விலை 1.73 சதவீதம் வரை சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 163 புள்ளிகள் அதிகரித்து 41,306 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 48 புள்ளிகள் உயா்ந்து 12,137 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com