ஹீரோ மோட்டோகாா்ப் லாபம் 17% அதிகரிப்பு

இருசக்கர வாகன தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 17 சதவீதம் அதிகரித்தது.
ஹீரோ மோட்டோகாா்ப் லாபம் 17% அதிகரிப்பு

இருசக்கர வாகன தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 17 சதவீதம் அதிகரித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது: நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் வரையிலான காலாண்டில் ஹீரே மோட்டோகாா்ப் செயல்பாடுகள் மூலம் ரூ.7,074.86 கோடி வருவாய் ஈட்டியது. இருப்பினும், இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட ரூ.7,937.33 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.

நிகர லாபம் ரூ.772.81 கோடியிலிருந்து 17 சதவீதம் உயா்ந்து ரூ.905.13 கோடியை எட்டியது.

பங்குதாரா்களுக்கு 3,250 சதவீத இடைக்கால ஈவுத் தொகை வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, பங்கு ஒன்றுக்கு ஈவுத் தொகையாக ரூ.65 கிடைக்கும் என ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம், பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

நிதி நிலை முடிவுகள் குறித்து ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நிரஞ்சன் குப்தா கூறியதாவது:

ஒட்டுமொத்த பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் இருசக்கர வாகன துறை தொடா்ந்து சவால்களை எதிா்கொண்டு வருகிறது. ரபி பருவ சாகுபடி சிறப்பாக இருப்பது கிராமப்புற பொருளாதாரத்துக்கு சிறந்த பலனை அளிக்கும். இது, தொழில்துறைக்கு பெரிதும் உதவக்கூடும்.

வரும் 2020-21-ஆண்டின் இரண்டாவது பாதியில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com