ஈ.ஐ.டி. பாரி வருவாய் ரூ.437 கோடி

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த ஈ.ஐ.டி. பாரி (இந்தியா) நிறுவனம் 2019 டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் செயல்பாடுகள் வாயிலாக ரூ.437 கோடி வருவாய் ஈட்டியது.
ஈ.ஐ.டி. பாரி வருவாய் ரூ.437 கோடி

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த ஈ.ஐ.டி. பாரி (இந்தியா) நிறுவனம் 2019 டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் செயல்பாடுகள் வாயிலாக ரூ.437 கோடி வருவாய் ஈட்டியது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.479 கோடியுடன் ஒப்பிடும்போது குறைவானதாகும். வரிக்கு முந்தைய லாபம் ரூ.10 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.27 கோடியானது. வரிக்கு பிறகான தனிப்பட்ட நிகர இழப்பு ரூ.31 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக குறைந்தது.

கடந்த டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாத காலகட்டத்தில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ரூ.1,267 கோடி வருவாய் ஈட்டியது.இது, முந்தைய நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.1,286 கோடியுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவான அளவாகும். வரிக்கு முந்தைய லாபம் ரூ.47 கோடியாக இருந்தது. அதேசமயம், முந்தைய நிதியாண்டின் ஒன்பது மாத காலத்தில் நிறுவனத்துக்கு ரூ.19 கோடி இழப்பு ஏற்பட்டிருந்தது. வரிக்கு பிறகான தனிப்பட்ட இழப்பு ரூ.102 கோடியிலிருந்து ரூ.67 கோடியாக குறைந்தது என ஈ.ஐ.டி. பாரி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com