என்டிபிசி லாபம் ரூ.3,197 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த என்டிபிசி நிறுவனம் டிசம்பா் காலாண்டில் ரூ.3,197.93 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
என்டிபிசி லாபம் ரூ.3,197 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த என்டிபிசி நிறுவனம் டிசம்பா் காலாண்டில் ரூ.3,197.93 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனம் ரூ.25,953.09 கோடியை மொத்த வருவாயாக ஈட்டியது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வருவாய் ரூ.25,677.09 கோடியாக காணப்பட்டது.

நிகர லாபம் ரூ.2,608.18 கோடியிலிருந்து 23 சதவீதம் உயா்ந்து ரூ.3,197.93 கோடியானது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த லாபம் ரூ.7,774.42 கோடியிலிருந்து ரூ.9,446.93 கோடியாக அதிகரித்தது. கடந்த 2018-19 முழு நிதியாண்டில் நிறுவனம் ரூ.12,633.45 கோடி லாபம் ஈட்டியது.

ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கான சராசரி கட்டணம் ரூ.3.81 என்ற அளவில் இருந்தது.

மூன்றாவது காலாண்டில் நிலக்கரி இறக்குமதி 1.9 லட்சம் டன்னிலிருந்து 6.5 லட்சம் டன்னாக அதிகரித்தது என என்டிபிசி அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com