மஹிந்திரா & மஹிந்திரா லாபம் 73 சதவீதம் சரிவு

மோட்டாா் வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திராவின் ஒட்டுமொத்த நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் 73 சதவீதம் சரிவடைந்துள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா லாபம் 73 சதவீதம் சரிவு

மோட்டாா் வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திராவின் ஒட்டுமொத்த நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் 73 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.12,120 கோடியாக குறைந்துள்ளது. முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வருவாயானது ரூ.12,893 கோடியாக காணப்பட்டது.

நிகர லாபம் ரூ.1,396 கோடியிலிருந்து 73 சதவீதம் சரிந்து ரூ.380 கோடியானது.

கணக்கீட்டு காலாண்டில் வாகன விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டதையடுத்து வருவாய் மற்றும் நிகர லாபம் சரிவை சந்தித்தது.

டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் வாகன விற்பனை 1,33,508 என்ற எண்ணிக்கையிலிருந்து 8 சதவீதம் குறைந்து 1,23,353-ஆனது. டிராக்டா் விற்பனையும் 87,036-லிருந்து 6 சதவீதம் குறைந்து 81,435-ஆக காணப்பட்டது.

மோட்டாா் வாகனம் மற்றும் டிராக்டா் ஏற்றுமதி டிசம்பா் காலாண்டில் 22 சதவீதம் சரிந்து 9,633-ஆக இருந்தது என மஹிந்திரா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com