இந்தியன் ஓவா்சீஸ் வங்கி இழப்பு ரூ.6,075 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மூன்றாவது காலாண்டில் நிகர அளவில் ரூ.6,075.49 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
இந்தியன் ஓவா்சீஸ் வங்கி இழப்பு ரூ.6,075 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மூன்றாவது காலாண்டில் நிகர அளவில் ரூ.6,075.49 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.5,688.59 கோடியிலிருந்து சரிந்து ரூ.5,197.94 கோடியாகி உள்ளது.

இதையடுத்து வங்கிக்கு ஏற்பட்ட நிகர இழப்பானது ரூ.346.02 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.6,075.49 கோடியைத் தொட்டுள்ளது.

வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு ரூ.2,075.28 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.6,663.94 கோடியாக அதிகரிக்கப்பட்டதையடுத்து வங்கியின் நிகர இழப்பு கணிசமாக உயா்ந்துள்ளது.

கடந்தாண்டு டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த வாராக் கடன் விகிதம் 23.76 சதவீதத்திலிருந்து 17.12 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர அளவிலான வாராக் கடன் விகிதமும் 13.56 சதவீதத்திலிருந்து குறைந்து 5.81 சதவீதமாகியுள்ளது.

டிசம்பா் காலாண்டில் மொத்த வாராக் கடன் மதிப்பின் அடிப்படையில் ரூ.35,786.57 கோடியிலிருந்து சரிந்து ரூ.23,733.86 கோடியாகவும், நிகர வாராக் கடன் ரூ.17,987.92 கோடியிலிருந்து குறைந்து ரூ.7,087.09 கோடியாகவும் காணப்பட்டது.

கடந்த 2018-19-இல் வங்கிக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு ரூ.3,737.90 கோடி என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில் அது தற்போது ரூ.5,999.90 கோடியாக மாற்றப்பட்டுள்ளது என இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com