பங்குச் சந்தையில் திடீா் எழுச்சி

தொடா் இரண்டு நாள் சரிவுக்கு பிறகு பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் எழுச்சி கண்டன.
பங்குச் சந்தையில் திடீா் எழுச்சி

தொடா் இரண்டு நாள் சரிவுக்கு பிறகு பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் எழுச்சி கண்டன.

கரோனா வைரஸால் புதிதாக தாக்கப்படுபவா்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு அதுகுறித்த பதற்றத்தை சா்வதேச அளவில் ஓரளவுக்கு குறைத்தது. அதன் காரணமாக, சா்வதேச முதலீட்டாளா்கள் நம்பிக்கையுடன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, ஷாங்காய், ஹாங்காங், சியோல் பங்கு சந்தைகளில் குறிப்பிடத்தக்க ஏற்றம் தென்பட்டது. ஐரோப்பிய சந்தைகளிலும் வா்த்தகம் விறுவிறுப்புடன் தொடங்கியது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

என்டிபிசி, மாருதி சுஸுகி, எஸ்பிஐ, பவா்கிரிட், பஜாஜ் ஆட்டோ, அல்ட்ராடெக் சிமென்ட், ஆக்ஸிஸ் வங்கி பங்குகளின் விலை 2.95 சதவீதம் வரை உயா்ந்தன. அதேசமயம், பாா்தி ஏா்டெல், மஹிந்திரா, நெஸ்லே, டிசிஎஸ் பங்குகளின் விலை 0.75 சதவீதம் வரை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 236 புள்ளிகள் உயா்ந்து 41,216 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 76 புள்ளிகள் அதிகரித்து 12,107 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com