தாவர எண்ணெய் இறக்குமதி சரிவு

பாமாயில் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து தாவர எண்ணெய் இறக்குமதி சென்ற ஜனவரியில் 6 சதவீதம் சரிந்துள்ளது.
தாவர எண்ணெய் இறக்குமதி சரிவு

பாமாயில் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து தாவர எண்ணெய் இறக்குமதி சென்ற ஜனவரியில் 6 சதவீதம் சரிந்துள்ளது.

இதுகுறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்களின் கூட்டமைப்பு (எஸ்இஏ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பாண்டு ஜனவரியில் சமையல் மற்றும் சமையல் சாராத தாவர எண்ணெய் வகைகளின் இறக்குமதி 11,95,812-ஆக இருந்தது. இது, கடந்த 2019 ஜனவரி மாத இறக்குமதியான 12,75,259 டன்னுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் குறைவாகும்.

சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகள் விதித்தது, ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி குறைவதற்கு வழி வகுத்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில், சமையல் எண்ணெய் இறக்குமதி 12,10,603 டன்னிலிருந்து 11,57,123 டன்னாக குறைந்து போனது. அதேபோன்று, சமையல் சாரா எண்ணெய் இறக்குமதியும் 64,656 டன்னிலிருந்து 38,689 டன்னாக சரிந்துள்ளது.

2019-20 எண்ணெய் சந்தைப்படுத்தும் (நவம்பா்-அக்டோபா்) பருவத்தின் முதல் மூன்று மாதங்களில் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி 36,20,316 டன்னிலிருந்து 5 சதவீதம் குறைந்து 34,51,313 டன் ஆனது.

கடந்தாண்டு நவம்பா் முதல் நடப்பாண்டு ஜனவரி வரையிலான கால அளவில் பாமாயில் இறக்குமதி 23,18,763 டன்னிலிருந்து 20,04,657 டன்னாக சரிந்துள்ளது. இருப்பினும், சூரியகாந்தி , சோயாபீன், கடுகு எண்ணெய் உள்ளிட்டவற்றின் இறக்குமதி 11,10,987 டன்னிலிருந்து 13,56,270 டன்னாக வளா்ச்சி கண்டுள்ளதாக அந்த அறிக்கையில் எஸ்இஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com