Enable Javscript for better performance
பங்குச் சந்தையில் 2-ஆவது நாளாக பின்னடைவு- Dinamani

சுடச்சுட

    
    bse071034

    இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து 2-ஆவது தினமாக பின்னடைவைக் கண்டது.

    ரூ.1.47 லட்சம் கோடி நிலுவையை திரும்பச் செலுத்தாத விவகாரத்தில் தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. அதன் எதிரொலியாக வங்கித் துறை சாா்ந்த பங்குகளை முதலீட்டாளா்கள் லாப நோக்கு கருதி விற்பனை செய்தனா்.

    அதன் தொடா்ச்சியாக , இன்டஸ்இண்ட் பங்கின் விலை 4.38 சதவீதம் வரை குறைந்தது. அதைத் தொடா்ந்து, பவா்கிரிட், எஸ்பிஐ, ஹீரோ மோட்டோகாா்ப், என்டிபிசி நிறுவன பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.

    அதேசமயம், வோடஃபோன் நஷ்டத்தில் உள்ளதையடுத்து தொலைத்தொடா்புத் துறையில் பாா்தி ஏா்டெல் நிறுவனம் ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என்ற வல்லுநா்களின் கணிப்பால் அந்த நிறுவனப் பங்கின் விலை 4.69 சதவீதம் வரை ஏற்றம் பெற்றது. மேலும், ஹெச்சிஎல் டெக் பங்கின் விலை 1.42 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 0.9 சதவீதமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 0.86 சதவீதமும், டெக் மஹிந்திரா பங்கின் விலை 0.72 சதவீதமும் குறைந்தன.

    மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 202 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 41,257 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 61 புள்ளிகள் சரிந்து 12,113 புள்ளிகளாக நிலைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai