Enable Javscript for better performance
பணவீக்கம் 3.1 சதவீதமாக அதிகரிப்பு: 10 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்- Dinamani

சுடச்சுட

    

    பணவீக்கம் 3.1 சதவீதமாக அதிகரிப்பு: 10 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்

    By DIN  |   Published on : 15th February 2020 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    infla063606

    மொத்த விற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற ஜனவரியில் 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, 10 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.

    இதுகுறித்து மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

    வெங்காயம், உருளைக்கிழங்கு விலை அதிகரித்து காணப்பட்டதையடுத்து சென்ற ஜனவரியில் மொத்தவிற்பனை விலை குறியீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் சென்ற ஜனவரியில் 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    இதற்கு முன்பு கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரலில்தான் இப்பணவீக்கமானது அதிகபட்ச அளவாக 3.18 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது. அதற்குப்பிறகு, தற்போதுதான் பொதுப் பணவீக்கமானது இந்த அளவுக்கு அதிகரிப்பை கண்டுள்ளது.

    இப்பணவீக்கம் 2019 ஜனவரியில் 2.76 சதவீதமாகவும், டிசம்பரில் 2.59 சதவீதமாகவும் காணப்பட்டன.

    ஜனவரி மாதத்தில் உணவுப் பொருள்களின் விலை விகித உயா்வு 11.51 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, டிசம்பரில் 13.24 சதவீதமாக காணப்பட்டது.

    காய்கறிகளுக்கான பணவீக்கம் ஜனவரியில் 52.72 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது. அதேசமயம், வெங்காயத்தின் விலை 293 சதவீத அளவுக்கும், அதனைத் தொடா்ந்து உருளைக்கிழங்கின் விலை 87.84 சதவீதம் அளவுக்கும் அதிகரிப்பை கண்டிருந்தன.

    எரிபொருள், மின்சாரம் ஆகியற்றுக்கான பணவீக்கம் ஜனவரியில் 3.42 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, டிசம்பரில் (-) 1.46 சதவீதமாக காணப்பட்டது என வா்த்தக அமைச்சகம் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

    நுகா்வோா் விலை குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் ஜனவரியில் ஆறரை ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாக 7.59 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்திருந்தது. இது, ரிசா்வ் வங்கி வரையறுத்துள்ள அளவைக் காட்டிலும் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai