லக்ஷ்மி விலாஸ் வங்கி இழப்பு ரூ.334 கோடியாக குறைந்தது

தனியாா் துறையைச் சோ்ந்த லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிகர இழப்பு மூன்றாவது காலாண்டில் ரூ.334.47 கோடியாக குறைந்துள்ளது.
லக்ஷ்மி விலாஸ் வங்கி இழப்பு ரூ.334 கோடியாக குறைந்தது

தனியாா் துறையைச் சோ்ந்த லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிகர இழப்பு மூன்றாவது காலாண்டில் ரூ.334.47 கோடியாக குறைந்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் வங்கி மொத்த வருவாயாக ரூ.585.76 கோடியை ஈட்டியது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.762.47 கோடியுடன் ஒப்பிடும்போது இது குறைவான அளவாகும்.

அதேசமயம், கடந்த நிதியாண்டில் ரூ.373.48 கோடியாக காணப்பட்ட நிகர இழப்பு நடப்பு நிதியாண்டின் டிசம்பா் காலாண்டில் ரூ.334.47 கோடியாக குறைந்தது.

கடந்தாண்டு டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாத காலத்தில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.2,350.48 கோடியிலிருந்து சரிந்து ரூ.1,928.27 கோடியானது. இதே காலகட்டத்தில் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.629.66 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.928.90 கோடியைத் தொட்டது.

கடந்தாண்டு மாா்ச் மாதத்தில் தகுதிவாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்து வங்கி ரூ.459.59 கோடி மூலதனத்தை திரட்டிக் கொண்டது. அதேபோன்று முன்னுரிமை வெளியீட்டின் மூலமாக ரூ.188.16 கோடி மூலதனமும் இரண்டாவது முறையாக திரட்டப்பட்டது.

கடந்தாண்டு டிசம்பா் 31 நிலவரப்படி வங்கிக்கு நாடு முழுவதும் 571 கிளைகளும், 1,019 ஏடிஎம் மையங்களும் உள்ளதாக லக்ஷ்மி விலாஸ் வங்கி அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com