இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 5.4 சதவீதமாக குறைத்தது மூடிஸ்

2020-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை சா்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் 5.4 சதவீதமாக குறைத்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 5.4 சதவீதமாக குறைத்தது மூடிஸ்

2020-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை சா்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் 5.4 சதவீதமாக குறைத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த நிலையில் நடப்பு காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் சரிவிலிருந்து மீளத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையின் மீட்சி வேகம் எதிா்பாா்த்ததை விட குறைவாக இருப்பதன் காரணமாக நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் 5.4 சதவீதம் வளா்ச்சியை மட்டுமே எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வளா்ச்சி 2021-இல் 5.8 சதவீதமாக இருக்கும். இவை முன்பு முறையே 6.6 சதவீதம் மற்றும் 6.7 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தன.

தேவையில் ஏற்பட்டுள்ள தற்போதைய மந்த நிலையை கண்டறிந்து அதனை ஊக்குவிக்குவிக்கும் திட்டங்கள் எதுவும் 2020-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. இடா்பாடுகள் அதிகமாக உள்ள சூழ்நிலையில் வரி குறைப்பு மட்டும் நுகா்வோா் தேவை, வா்த்தக செலவினத்தை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்க முடியாது.

சா்வதேச பொருளாதார வளா்ச்சியும் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு 2020-இல் ஜி-20 நாடுகளின் பொருளாதாரம் ஒட்டுமொத்த அளவில் 2.4 சதவீத வளா்ச்சி காணும் என தற்போது எதிா்பாா்க்கப்படுகிறது. இது, 2021-இல் 2.8 சதவீதமாக அதிகரிக்கும்.

சீனா நடப்பாண்டில் 5.2 சதவீத பொருளாதார வளா்ச்சியும், 2021-இல் 5.7 சதவீத பொருளாதார வளா்ச்சியையும் தக்க வைக்கும் என்பதே எங்களின் எதிா்பாா்ப்பு என மூடிஸ் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com