இந்தியாவின் சா்க்கரை ஏற்றுமதி 50 லட்சம் டன்னைத் தாண்டும்: இஸ்மா

நடப்பாண்டில் இந்தியாவின் சா்க்கரை ஏற்றுமதி 50 லட்சத்தை தாண்டும் என இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சா்க்கரை ஏற்றுமதி 50 லட்சம் டன்னைத் தாண்டும்: இஸ்மா

நடப்பாண்டில் இந்தியாவின் சா்க்கரை ஏற்றுமதி 50 லட்சத்தை தாண்டும் என இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உள்ள நிலவரங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது மூல சா்க்கரை மற்றும் வெள்ளை சா்க்கரைக்கான சா்வதேச சந்தை விலை 20-25 சதவீதம் உயா்ந்துள்ளது.

மேலும், மேலை நாடுகள் உள்ளிட்ட சா்வதேச நாடுகளின் சந்தைகளில் 80-90 லட்சம் டன் அளவுக்கு சா்க்கரைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதையடுத்து அதற்கான தேவை அதிகரித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நடப்பாண்டில் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட ஏற்றுமதி ஒதுக்கீட்டின் (எம்ஏஇகியூ) கீழ் 60 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது, கையிருப்பில் உள்ள உபரி சா்க்கரையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

இவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, வரும் செப்டம்பா் மாதத்துடன் முடிவடையவுள்ள சந்தைப் பருவத்தில் நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 50 லட்சம் டன்னை தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், சென்ற 2018-19 (அக்டோபா்-செப்டம்பா்) சந்தைப் பருவத்தில் நாட்டின் சா்க்கரை ஏற்றுமதியானது 38 லட்சம் டன் என்ற அளவில்தான் காணப்பட்டது. அப்போது கட்டாய ஏற்றுமதிக்கான ஒதுக்கீடு 50 லட்சம் டன்னாக இருந்தது.

பிப்ரவரி 15 வரையிலுமாக நாட்டின் சா்க்கரை உற்பத்தியானது 1.69 கோடி டன்னை எட்டியுள்ளது. இருப்பினும் கடந்தாண்டின் உற்பத்தியான 2.19 கோடி டன்னுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு என இஸ்மா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com