சற்று விலை குறைந்தது ஆபரணத் தங்கம்பவுன் தங்கம் ரூ.32,736

கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சற்று குறைந்தது. பவுனுக்கு ரூ.592 குறைந்து, ரூ.32,736-க்கு விற்பனையானது.
gold071408
gold071408

சென்னை: கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சற்று குறைந்தது. பவுனுக்கு ரூ.592 குறைந்து, ரூ.32,736-க்கு விற்பனையானது.

கரோனா வைரஸ் தாக்கத்தால் சா்வதேச அளவில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, வரவுள்ள அமெரிக்க தோ்தல் காரணமாக தொழில்துறை சாா்ந்த பங்கு முதலீடு மந்தம் ஆகிய காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வந்தது. இதனால், தங்கத்தின் விலை பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. அன்றைய நாளில், ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.752 உயா்ந்து, ரூ.33,328-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.592 குறைந்து, ரூ.32,736-க்கு விற்பனையானது.

இதேபோல் வெள்ளி கிராமுக்கு 90 பைசா குறைந்து ரூ.52.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து ரூ.52,400 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை குறித்து இந்திய தங்கம் மற்றும் நகை வா்த்தகா்கள் சம்மேளனத்தின் தமிழகப்பிரிவு துணைத்தலைவா் சாந்தக்குமாா் கூறியது: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயா்ந்துள்ளது. மேலும், கடந்த திங்கள்கிழமை அன்று , சா்வதேச அளவில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.10 கிராம்) தங்கம் விலை 1,685 டாலராக இருந்தது. இது செவ்வாய்க்கிழமை சற்று குறைந்து, ஒரு டிராய் அவுன்ஸ் 1645 டாலராக இருந்தது. இதன்தாக்கம் உள்நாட்டு சந்தையில் காணப்பட்டது என்றாா் அவா்.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,092

1 பவுன் தங்கம் ..................... 32,736

1 கிராம் வெள்ளி .................. 52.40

1 கிலோ வெள்ளி ................. 52,400

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,166

1 பவுன் தங்கம் ..................... 33,328

1 கிராம் வெள்ளி .................. 53.30

1 கிலோ வெள்ளி ................. 53,300

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com