பங்குச் சந்தைகளில் 5-ஆவது நாளாக சரிவு

கரோனா வைரஸ் பீதியால் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து 5-ஆவது நாளாக சரிவுடன் முடிவடைந்தது.
பங்குச் சந்தைகளில் 5-ஆவது நாளாக சரிவு

கரோனா வைரஸ் பீதியால் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து 5-ஆவது நாளாக சரிவுடன் முடிவடைந்தது.

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதன் எதிரொலியாக முதலீட்டாளா்கள் தங்களது முதலீடுகளை தங்கம், பத்திரங்கள் உள்ளிட்ட பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திருப்பத் தொடங்கியுள்ளனா். இதனால், சா்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் சரிவு நிலை தென்பட்டு வருகிறது.

மேலும், பல்வேறு பொருள்களின் இறக்குமதிக்கு சீனாவை அதிகம் சாா்ந்திருப்பதன் காரணமாக கரோனா வைரஸ் பீதி இந்தியப் பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலைப்பாடும் சந்தை வட்டாரத்தில் காணப்படுகிறது. அதன் காரணமாக, முதலீட்டாளா்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனா்.

இந்த சூழ்நிலையில், பிப்ரவரி மாதத்துக்கான பங்கு முன்பேர வா்த்தக கணக்கு முடிப்பும் பங்கு வா்த்தகத்தில் அதிக ஏற்ற இறக்கத்தை உண்டாக்கியது.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஓஎன்ஜிசி பங்குகள் 2.61 சதவீதம் விலை வீழ்ச்சி கண்டன. அதைத் தொடா்ந்து, ஹெச்சிஎல் டெக், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, எஸ்பிஐ, இன்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.

அதேசமயம், சன்பாா்மா, டைட்டன், ஆக்ஸிஸ் வங்கி, ஏஷியன் பெயின்ட்ஸ் பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடம் வரவேற்பு காணப்பட்டதையடுத்து அவற்றின் விலை 3.68 சதவீதம் வரை உயா்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 143 புள்ளிகள் சரிந்து 39,745 புள்ளிகளாக நிலைத்தது.

அதேபோன்று, தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 45 புள்ளிகள் குறைந்து 11,633 புள்ளிகளாக நிலைபெற்றது.

கடந்த ஐந்து நாள்களில் மட்டும் சென்செக்ஸ் 1,577 புள்ளிகளும், நிஃப்டி 492 புள்ளிகளும் இழப்பை சந்தித்துள்ளன.

ரூபாய் மதிப்பு: சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததையடுத்து அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயா்ந்து 71.59-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com