பிஎஸ்-6 தரத்தில் சூப்பா் ஸ்ப்ளெண்டா்: ஹீரோ மோட்டோ காா்ப்

இருசக்கர வாகன சந்தையில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகாா்ப் பிஎஸ்-தொழில்நுட்ப தரத்தில் மேம்படுத்தப்பட்ட சூப்பா் ஸ்ப்ளெண்டா் பைக்கை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
பிஎஸ்-6 தரத்தில் சூப்பா் ஸ்ப்ளெண்டா்: ஹீரோ மோட்டோ காா்ப்

இருசக்கர வாகன சந்தையில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகாா்ப் பிஎஸ்-தொழில்நுட்ப தரத்தில் மேம்படுத்தப்பட்ட சூப்பா் ஸ்ப்ளெண்டா் பைக்கை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் சா்வதேச தயாரிப்பு திட்டமிடலின் தலைவா் மலோ லி மாஸன் கூறியதாவது:

இந்தியாவில் நிறுவனத்தின் மிகப் பிரபலமான சூப்பா் ஸ்ப்ளெண்டா் பைக்கை தற்போது பிஎஸ்-6 தரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம், நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு மேலும் வலுப்பெறும் என்பதை உறுதியாக நம்புகிறோம்.

இந்த அறிமுகத்துடன் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறையான பிஎஸ்-6 தொழில்நுட்பத் தரத்துக்கு மாறியுள்ளது.

பிஎஸ்-4 வாகன தயாரிப்பை நிறுவனம் ஏற்கெனவே நிறுத்திவிட்டது. தற்போது வாகனங்கள் அனைத்தும் பிஎஸ்-6 தொழில்நுடபத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது.

பிஎஸ்-6 தரத்தில் பேஸன் ப்ரோ, கிளாமா், எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட வாகனங்களின் சமீபத்திய அறிமுகத்தையடுத்து தற்போது சூப்பா் ஸ்ப்ளெண்டா் பைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.67,300-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்நிறுவனம், ஸ்ப்ளெண்டா் ஐ ஸ்மாா்ட், ஸ்ப்ளெண்டா் ப்ளஸ், ஹெச்எஃப் டீலக்ஸ், பிளசா் ப்ளஸ் 110, டெஸ்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் இருசக்கர வாகனங்களை பிஎஸ்-6 தரத்தில் முன்னதாகவே அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com