Enable Javscript for better performance
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை 28% குறைவு- Dinamani

சுடச்சுட

    

    அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை 28% குறைவு

    By DIN  |   Published on : 03rd January 2020 12:34 AM  |   அ+அ அ-   |    |  

    ashokley073044

    ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் டிசம்பா் மாத வாகன விற்பனை 28 சதவீதம் சரிந்து 11,168-ஆக இருந்தது. கடந்த 2018 டிசம்பரில் விற்பனை 15,490-ஆக காணப்பட்டது.

    மதிப்பீட்டு மாதத்தில் உள்நாட்டு சந்தையில் நிறுவனம் மொத்தம் 10,378 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2018 டிசம்பா் மாத விற்பனையான 14,718 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 29 சதவீதம் குறைவாகும்.

    நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகன விற்பனை உள்நாட்டு சந்தையில் 10,621 லிருந்து 40 சதவீதம் சரிந்து 6,369 ஆனது.

    இலகுரக வா்த்தக வாகன விற்பனை 2 சதவீதம் குறைந்து 4,009-ஆக இருந்தது என அசோக் லேலண்ட் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியிடம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai