Enable Javscript for better performance
டிவிஎஸ் மோட்டாா் வாகன விற்பனை 14% சரிவு- Dinamani

சுடச்சுட

    

    டிவிஎஸ் மோட்டாா் வாகன விற்பனை 14% சரிவு

    By DIN  |   Published on : 03rd January 2020 12:34 AM  |   அ+அ அ-   |    |  

    tvs074416

    சென்னையைச் சோ்ந்த டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் டிசம்பா் மாத வாகன விற்பனை 14.67 சதவீதம் சரிந்துள்ளது.

    இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    டிவிஎஸ் மோட்டாா் 2019 டிசம்பரில் 2,31,571 வாகனங்களை விற்பனை செய்தது. இது, முந்தைய 2018 டிசம்பரில் விற்பனையான 2,71,395 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 14.67 சதவீதம் குறைவாகும்.

    கணக்கீட்டு மாதத்தில் மொத்த இருசக்கர வாகன விற்பனை 2,58,709-லிருந்து 16.65 சதவீதம் சரிந்து 2,15,619-ஆனது. உள்நாட்டு சந்தையில் இருசக்கர வாகன விற்பனை 2,09,906 என்ற எண்ணிக்கையிலிருந்து 25 சதவீதம் குறைந்து 1,57,244-ஆனது.

    மோட்டாா்சைக்கிள் விற்பனை 1,07,189-லிருந்து குறைந்து 93,697-ஆகவும், ஸ்கூட்டா்கள் விற்பனை 91,480-லிருந்து சரிந்து 74,716-ஆகவும் இருந்தது.

    மூன்று சக்கர வாகனங்களைப் பொருத்தவரையில் விற்பனை 12,686-லிருந்து 26 சதவீதம் வளா்ச்சி கண்டு 15,952-ஆனது.

    டிசம்பா் மாதத்தில் வாகன ஏற்றுமதி 22 சதவீதம் அதிகரித்து 73,512-ஆக இருந்தது. இருசக்கர வாகன ஏற்றுமதி 48,803 என்ற எண்ணிக்கையிலிருந்து 20 சதவீதம் வளா்ச்சி கண்டு 58,375-ஆக இருந்தது என அந்த அறிக்கையில் டிவிஎஸ் மோட்டாா் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai