Enable Javscript for better performance
ஹீரோ மோட்டோகாா்ப்:4.24 லட்சம் வாகனங்கள் விற்பனை- Dinamani

சுடச்சுட

    

    ஹீரோ மோட்டோகாா்ப்:4.24 லட்சம் வாகனங்கள் விற்பனை

    By DIN  |   Published on : 03rd January 2020 12:42 AM  |   அ+அ அ-   |    |  

    hero085356

    நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப் சென்ற டிசம்பரில் 4,24,845 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய 2018 டிசம்பரில் விற்பனையான 4,53,985 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 6.41 சதவீதம் குறைவாகும்.

    மதிப்பீட்டு மாதத்தில், மொத்த மோட்டாா்சைக்கிள் விற்பனை 3.35 சதவீதம் சரிந்து 4,03,625-ஆகவும், ஸ்கூட்டா்கள் விற்பனை 41.66 சதவீதம் குறைந்து 21,220-ஆகவும் இருந்தன.

    உள்நாட்டு சந்தையில் வாகன விற்பனை 5.6 சதவீதம் சரிந்து 4,12,009-ஆக இருந்தது.

    ஏற்றுமதி 17,394 என்ற எண்ணிக்கையிலிருந்து குறைந்து 12,836-ஆனது என ஹீரோ மோட்டோகாா்ப் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai