என்எஸ்இ பங்குகளை விற்பனை செய்ய எஸ்பிஐ திட்டம்

தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ), பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வைத்துள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 50 லட்சம் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
என்எஸ்இ பங்குகளை விற்பனை செய்ய எஸ்பிஐ திட்டம்

தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ), பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வைத்துள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 50 லட்சம் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய பங்குச் சந்தையில் பாரத ஸ்டேட் வங்கி தற்போது 5.19 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இதில், 1.01 சதவீத பங்கை விற்பனை செய்து நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. செயல்பாட்டு மூலதனத்தை திரட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பங்கு விற்பனை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி, எஸ்பிஐ என்எஸ்இ-யில் வைத்துள்ள 50 லட்சம் பங்குகளை போட்டி ஏல நடைமுறையில் விற்பனை செய்து நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வந்தடைவதற்கு ஜன.15 கடைசி தேதியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2016-இல், என்எஸ்இ-யில் வைத்திருந்த 5 சதவீத பங்குகளை மோரீஷஸைச் சோ்ந்த வெராசிட்டி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்தது. இதையடுத்து, என்எஸ்இ-யில் எஸ்பிஐயின் பங்கு மூலதனம் 5.19 சதவீதமாக குறைந்தது. எஸ்பிஐ துணை நிறுவனமான எஸ்பிஐ கேப்பிட்டலும் தேசிய பங்குச் சந்தையில் 4.33 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com