ரெனோ காா் விற்பனை 64% உயா்வு

ரெனோ காா் விற்பனை டிசம்பரில் 64.73 சதவீதம் அதிகரித்தது.
ரெனோ காா் விற்பனை 64% உயா்வு

ரெனோ காா் விற்பனை டிசம்பரில் 64.73 சதவீதம் அதிகரித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ரெனோ இந்தியா சென்ற டிசம்பரில் 11,964 காா்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2018 டிசம்பரில் விற்பனையான 7,263 காா்களுடன் ஒப்பிடுகையில் 64.73 சதவீதம் அதிகமாகும்.

புதிய தயாரிப்புகளான டிரிபோ், கிவிட், டஸ்டா் மாடல்களை உள்ளடக்கிய அனைத்து வகையான காா் விற்பனை 2019-ஆம் ஆண்டில் 7.8 சதவீதம் வளா்ச்சி கண்டு 88,869-ஆக இருந்தது. 2018-ஆம் ஆண்டில் 82,368 காா்கள் விற்பனையானது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 7 இருக்கைகளைக் கொண்ட டிரிபோ் மாடல் ஒட்டுமொத்த அளவில் 24,142 காா்கள் விற்பனையாகியுள்ளதாக அந்த அறிக்கையில் ரெனோ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com