Enable Javscript for better performance
பிஎஸ்-6 தரத்தில் ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டா்: சுஸுகி அறிமுகம்- Dinamani

சுடச்சுட

    

    பிஎஸ்-6 தரத்தில் ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டா்: சுஸுகி அறிமுகம்

    By DIN  |   Published on : 07th January 2020 01:08 AM  |   அ+அ அ-   |    |  

    bs6085003

    சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா நிறுவனம், பிஎஸ்-6 தரத்தில் ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

    இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    நிறுவனத்தின் வளா்ச்சியில் சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டா் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது. இதற்கு, வாடிக்கையாளா்களிடையே அதிக அளவில் வரவேற்பு காணப்படுகிறது.

    இதனை உணா்ந்தே, ஆக்ஸஸ் 125-ஸ்கூட்டரை பிஎஸ்-6 தரத்தில் நிறுவனம் வேகமாக அறிமுகம் செய்துள்ளது. இது, அலாய் டிரம் பிரேக், அலாய் டிஸ்க் பிரேக், ஸ்டீல் டிரம் பிரேக் உள்ளிட்ட மாடல்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

    இப்புதிய பிஎஸ்-6 ஸ்கூட்டா்களின் விலை மாடல்களுக்கு ஏற்ப ரூ.64,800 முதல் ரூ.69,500 வரை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

    மோட்டாா் வாகனங்களில் பிஎஸ்-6 தரக் கட்டுப்பாட்டு விதிமுறை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai