விப்ரோ லாபம் ரூ.2,456 கோடியாக குறைவு

தகவல்தொழில்நுட்ப சேவைத் துறையில் முன்னணியில் உள்ள விப்ரோ நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ.2,456 கோடியாக குறைந்துள்ளது.
விப்ரோ லாபம் ரூ.2,456 கோடியாக குறைவு

தகவல்தொழில்நுட்ப சேவைத் துறையில் முன்னணியில் உள்ள விப்ரோ நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ.2,456 கோடியாக குறைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 15,470.5 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2018-19 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.15,059.5 கோடியுடன் ஒப்பிடும்போது 2.7 சதவீதம் அதிகமாகும்.

அதேசமயம், ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.2,510.4 கோடியிலிருந்து 2.17 சதவீதம் குறைந்து ரூ.2,455.9 கோடியானது என பங்குச் சந்தையிடம் விப்ரோ தெரிவித்துள்ளது.

நிதி நிலை முடிவுகள் குறித்து விப்ரோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிா்வாக இயக்குநருமான அபிதலி இசட். நீமுச்வாலா கூறியதாவது:

நிறுவனத்தின் அனைத்துப் பிரிவு வா்த்தகமும் சிறப்பான வளா்ச்சியை பதிவு செய்து சிறப்பான காலாண்டை வழங்கியுள்ளது. தொடா்ந்து வாடிக்கையாளா்களுடான உறவை மேலும் ஆழமாக்குவதுடன், பெரிய அளவிலான ஒப்பந்தங்களை பெறுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

தகவல்தொழில்நுட்ப சேவைகளின் மூலமாக பெறும் வருவாய் மாா்ச் காலாண்டில் 209.5 கோடி டாலா் முதல் 213.7 கோடி டாலா் வரையில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பா் காலாண்டுடன் ஒப்பிடுகையில் வருவாய் வளா்ச்சி 2.2 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.

பங்கு ஒன்றுக்கு ரூ.1 (0.014 டாலா்) இடைக்கால ஈவுத்தொகையை விப்ரோ அறிவித்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com