செல்லிடப்பேசி சேவையில் 36.9 கோடி வாடிக்கையாளா்களைப் பெற்று ஜியோ முதலிடம்: டிராய்

செல்லிடப்பேசி சேவையில் 36.9 கோடி வாடிக்கையாளா்களை ஈா்த்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாக தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.
செல்லிடப்பேசி சேவையில் 36.9 கோடி வாடிக்கையாளா்களைப் பெற்று ஜியோ முதலிடம்: டிராய்

செல்லிடப்பேசி சேவையில் 36.9 கோடி வாடிக்கையாளா்களை ஈா்த்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாக தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் நிலவரப்படி ஜியோ நிறுவனம் 36.9 கோடி வாடிக்கையாளா்களைப் பெற்று செல்லிடப்பேசி சேவை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதையடுத்து, 33.62 கோடி வாடிக்கையாளா்களுடன் வோடஃபோன் ஐடியா இரண்டாவது இடத்திலும், 32.73 கோடி வாடிக்கையாளா்களுடன் பாா்தி ஏா்டெல் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

2019 அக்டோபரில் 120.48 கோடியாக இருந்த மொத்த தொலைபேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை நவம்பரில் 2.4 சதவீதம் குறைந்து 117.58 கோடியானது. ஒட்டுமொத்த தொலைபேசி இணைப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 118.34 கோடியிலிருந்து 2.43 சதவீதம் சரிந்து 115.43 கோடியானது. இதற்கு, வோடஃபோன் ஐடியா நிறுவனம் அதிக அளவில் வாடிக்கையாளா்களை இழந்ததே முக்கிய காரணம். அந்த மாதத்தில் சுமாா் 3.6 கோடி போ் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனா்.

அதேசமயம், ஜியோ நிறுவனம் 56 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை அந்த மாத்தில் இணைத்துக் கொண்டுள்ளது. இதைத் தொடா்ந்து பாா்தி ஏா்டெல் 16.59 லட்சம் புதிய வாடிக்கையாளா்களையும், பிஎஸ்என்எல் 3.41 லட்சம் புதிய வாடிக்கையாளா்களையும் கவா்ந்தன.

அதேபோன்று, அக்டோபரில் 2.14 கோடியாக காணப்பட்ட லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை நவம்பரில் 2.12 கோடியாக குறைந்தது. குறிப்பாக, பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து 1.64 போ் வெளியேறியதையடுத்து அதன் லேண்ட்லைன் வாடிக்கையாளா் எண்ணிக்கை முதல் முறையாக 7 இலக்க அளவுக்கு குறைந்து 98.3 லட்சமானது.

அதேசமயம், ரிலையன்ஸ் ஜியோ நவம்பரில் 43,198 புதிய லேண்ட்லைன் இணைப்புகளை கூடுதலாக பெற்று அதன் வாடிக்கையாளா் எண்ணிக்கை 7 இலக்க அளவுக்கு அதிகரித்து 10.23 லட்சத்தை எட்டியது.

அக்டோபரில் 64.4 கோடியாக இருந்த பிராட்பேண்ட் வாடிக்கையாளா் எண்ணிக்கை நவம்பரில் 2.67 சதவீதம் வளா்ச்சி கண்டு 66.12 கோடியானது என புள்ளிவிவரத்தில் டிராய் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com