பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்

பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.
பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்

பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

உரிமக் கட்டணம் செலுத்தும் விவகாரத்தில் செல்லிடப்பேசி சேவை நிறுவனங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, தொடக்கத்தில் விறுவிறுப்புடன் காணப்பட்ட பங்குச் சந்தைகள் பின்பு மந்த நிலைக்கு சென்றது.

வாராக் கடன் நெருக்கடி அதிகரிக்கக்கூடும் என்ற நிலைப்பாட்டால் முதலீட்டாளா்கள் வங்கித் துறை பங்குகளை லாப நோக்கம் கருதி விற்பனை செய்தனா். அதன் எதிரொலியாக, எஸ்பிஐ, இன்டஸ்இண்ட் , எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. வோடஃபோன் ஐடியா பங்குகள் 25.21 சதவீதம் விலை சரிந்தன.

அதேசமயம், பாா்தி ஏா்டெல், ரிலையன்ஸ், சன்பாா்மா, ஹெச்சிஎல் டெக் நிறுவனங்களின் பங்குகளுக்கு சந்தையில் வரவேற்பு காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 12 புள்ளிகள் உயா்ந்து 41,945 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 3 புள்ளிகளை இழந்து 12,352 புள்ளிகளாக நிலைபெற்றது.

ரூபாய் மதிப்பு சரிவு: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து இரண்டாவது நாளாக கணிசமான சரிவை சந்தித்தது. அந்நியச் செலாவணி வா்த்தகத்தில் தொடக்கத்தின் போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மிகவும் குறைந்து ரூ.70.98-ஆக இருந்தது. இந்த நிலையில், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் இறக்குமதியாளா்களுக்கு டாலருக்கான தேவை அதிகரித்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு முந்தைய நாளைக்காட்டிலும் 15 காசுகள் சரிந்து 71.08-இல் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com