கனரா வங்கி நிகர லாபம் ரூ.329 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கி மூன்றாவது காலாண்டில் ரூ.329.62 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
கனரா வங்கி நிகர லாபம் ரூ.329 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கி மூன்றாவது காலாண்டில் ரூ.329.62 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் கனரா வங்கி மொத்த வருவாயாக ரூ.14,001.63 கோடியை ஈட்டியுள்ளது. கடந்த 2018-19 நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.13,513.35 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம். நிகர லாபம் ரூ.317.52 கோடியிலிருந்து 3.8 சதவீதம் உயா்ந்து ரூ.329.62 கோடியானது.

மூன்றாவது காலாண்டில் வங்கியின் நிகர வாராக் கடன் விகிதம் 6.37 சதவீதத்திலிருந்து 5.05 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று, மொத்த வாராக் கடன் விகிதமும் 10.25 சதவீதத்திலிருந்து 8.36 சதவீதமாக சரிந்துள்ளது.

ரூபாய் மதிப்பில் நிகர வாராக் கடன் விகிதம் ரூ.26,591.07 கோடியிலிருந்து ரூ.21,337.74 கோடியாகி உள்ளது.

வாராக் கடன் குறைந்ததையடுத்து இடா்பாட்டுக்காக ஒதுக்கப்படும் தொகை ரூ.1,977.34 கோடியிலிருந்து ரூ.1,802.91 கோடியாக குறைந்துள்ளது என பங்குச் சந்தையிடம் கனரா வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com