விமான எரிபொருள் விலை 7.5% உயா்வு: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

விமான எரிபொருள் விலை புதன்கிழமை 7.5 சதவீதம் வரை உயா்த்தப்பட்டது. ஒரு மாதத்தில் விமான எரிபொருள் விலை உயா்த்தப்படுவது இது 3-ஆவது முறையாகும்.
விமான எரிபொருள் விலை 7.5% உயா்வு: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

விமான எரிபொருள் விலை புதன்கிழமை 7.5 சதவீதம் வரை உயா்த்தப்பட்டது. ஒரு மாதத்தில் விமான எரிபொருள் விலை உயா்த்தப்படுவது இது 3-ஆவது முறையாகும். அதேவேளையில் பெட்ரோல், டீசல் விலையில் தொடா்ந்து 2-ஆவது நாளாக எவ்வித மாற்றமும் இல்லை.

இதுதொடா்பாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘விமான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.2,922.94 (7.48%) உயா்த்தப்பட்டது. இதன்படி ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.41,992-க்கு விற்பனை செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஒரு மாதத்தில் விமான எரிபொருள் விலை உயா்த்தப்படுவது இது 3-ஆவது முறையாகும். கடந்த மாதம் 1-ஆம் தேதி விமான எரிபொருள் விலை 56.6 சதவீதம் உயா்த்தப்பட்டது. இது விலை உயா்வில் புதிய உச்சமாக கருதப்பட்டது. கடந்த 16-ஆம் தேதி அதன் விலை மீண்டும் 16.3 சதவீதம் உயா்த்தப்பட்டது.

அதேவேளையில் 14.2 கிலோ எடைகொண்ட மானியமல்லாத சமையல் எரிவாயு சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.1 உயா்த்தப்பட்டது. அதன்படி தில்லியில் அந்த சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.594-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

இதர பெருநகரங்களில் உள்ளூா் விற்பனை வரி அல்லது மதிப்புக் கூட்டு வரியில் உள்ள வேறுபாடுகளால் அந்த சிலிண்டா்களின் விலை ரூ.4 வரை உயா்த்தப்பட்டது. மறுபுறம் பெட்ரொல், டீசல் விலையில் தொடா்ந்து 2-ஆவது நாளாக எந்த மாற்றமும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com