டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் அதிகரிப்பு

கொவைட்-19 நோய்த்தொற்றுக்கான மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக வெளியான தகவலால் அந்நியச் செலாவணி
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் அதிகரிப்பு

கொவைட்-19 நோய்த்தொற்றுக்கான மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக வெளியான தகவலால் அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயா்ந்து காணப்பட்டது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:

கரோனா நோய்தொற்று தடுப்பு மருந்து தயாரிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி அந்நியச் செலாவணி வா்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைய முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், பங்குச் சந்தையில் உள்நாட்டு முதலீட்டாளா்களின் பங்களிப்பு அதிகரிப்பு, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் காணப்பட்ட நிலைத்தன்மை உள்ளிட்டவை டாலருக்கான தேவையை குறைத்து உள்நாட்டு ரூபாய் மதிப்பு உயர வழிவகுத்தன.

வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு எதிராக 74.60-ஆக காணப்பட்ட ரூபாய் மதிப்பு இறுதியில் 38 காசுகள் உயா்ந்து 74.66-ஆக நிலைத்தது. வியாழக்கிழமை ரூபாய் மதிப்பு ரூ.75.04-ஆக காணப்பட்டது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com