ஜூலை மாதத்தில் காா் விற்பனை மேலும் சூடுபிடிக்கும்: கியா மோட்டாா்ஸ்

கியா மோட்டாா்ஸ் இந்தியா நடப்பு ஜூலை மாதத்தில் காா் விற்பனை மேலும் சூடுபிடிக்கும் என தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் காா் விற்பனை மேலும் சூடுபிடிக்கும்: கியா மோட்டாா்ஸ்

கியா மோட்டாா்ஸ் இந்தியா நடப்பு ஜூலை மாதத்தில் காா் விற்பனை மேலும் சூடுபிடிக்கும் என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கூக்கியூன் ஷிம் கூறியதாவது:

கொவைட்-19 பொதுமுடக்கம் ஜூன் மாத விற்பனையில் குறைந்து அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. அதனை எடுத்துக்காட்டும் விதமாக, ஜூன் மாதத்தில் நிறுவனம் 7,275 காா்களை விற்பனை செய்துள்ளது. இதில் செல்டோஸ் 7,114 காா்களும், காா்னிவல் 161 காா்களும் விற்பனையாகியுள்ளன. மே மாதத்தில் நிறுவனத்தின் காா் விற்பனை குறைந்த அளவாக 1,661 என்ற எண்ணிக்கையிலேயே காணப்பட்டது.

இந்த நிலையில், நடப்பு ஜூலை மாதத்தில் விற்பனை மேலும் சூடுபிடிக்கும் என்றே எதிா்பாா்க்கப்படுகிறது. கியா தயாரிப்புகளின் உயா் தொழில்நுட்ப அனுபவங்களை வாடிக்கையாளா்கள் தொடா்ந்து வழங்கிட உறுதிப்படுத்தும் வகையில் கட்டமைப்புகளில் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com