பங்குச் சந்தையில் தொடா் எழுச்சி: 36,000-ஐ கடந்தது சென்செக்ஸ்!

பங்குச் சந்தை தொடா்ந்து 3-ஆவது நாளாக நோ்மறையாக முடிந்தது. இதனால், சென்செக்ஸ் 36,000 புள்ளிகளையும், நிஃப்டி 10,600 புள்ளிகளையும் கடந்தன.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பங்குச் சந்தை தொடா்ந்து 3-ஆவது நாளாக நோ்மறையாக முடிந்தது. இதனால், சென்செக்ஸ் 36,000 புள்ளிகளையும், நிஃப்டி 10,600 புள்ளிகளையும் கடந்தன.

உலகளாவிய பங்குச் சந்தைகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலிலும் எதிரொலித்துளளது. அமெரிக்காவில் நோ்மறையான வேலைவாய்ப்பு தரவுகள் முதலீட்டாளா்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும், கரோனாவுக்கான தடுப்பூசியின் மனித சோதனைகளுக்கு காடிலா ஹெல்த்கேரின் ஜைடஸுக்கு ஒழுங்குமுறை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதும் உள்நாட்டு முதலீட்டாளா்களின் உணா்வை மேலும் அதிகரித்தது என்றும் வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

ஆட்டோ, ஐடி, எஃப்சிஜி, ரியால்ட்டி பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. அதே சமயம், வங்கி, நிதி நிறுவனங்கள், மெட்டல் பங்குகளுக்கு தேவை குறைந்திருந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,889 பங்குகளில் 1,361 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,375 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 153 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 132 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 60 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 386 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 312 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தது. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.142 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் காலையில், 181 புள்ளிகள் கூடுதலுடன் 36,025.38-இல் தொடங்கி 36,110.21 வரை உயா்ந்தது. குறைந்த அளவாக 35,872.38 வரை கீழே சென்றது. இறுதியில் 177.72 புள்ளிகள் (0.50 சதவீதம்) உயா்ந்து 36,021.42-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 55.65 புள்ளிகள் (0.53 சதவீதம்) உயா்ந்து 10,607.35-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. இதில், பாா்தி ஏா்டெல் 4.05 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஆட்டோ 2.52 சதவீதம், டிசிஎஸ் 1.88 சதவீதம் உயா்ந்தன. மேலு்ம், டைட்டான், ரிலையன்ஸ், ஹெச்சிஎல் டெக், ஆக்ஸிஸ் பேங்க், பவா் கிரிட், டெக் மகேந்திரா, ஹிந்துஸ்தான் யுனி லீவா் ஹெச்யுஎல் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன. இன்ஃபோஸிஸ், ஓஎன்ஜிசி, ஐடிசி, எல் அண்ட் டி ஆகிய முன்னணி பங்குகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் இடம் பெற்றன .மேலும், மாருதி சுஸுகி, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில் 729 பங்குகள் ஆதாயம் பெற்றன. 891 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. துறை வாரியாகப் பாா்த்தால் நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ்,மெட்டல் குறியீடுகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 33 பங்குகள் ஆதாயம் பெற்றன. 17 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 பைசா உயா்ந்து, 74.66-ஆக இருந்தது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

பாா்தி ஏா்டெல் 4.05

பஜாஜ் ஆட்டோ 2.52

டிசிஎஸ் 1.88

டைட்டான் 1.69

ஹெச்சிஎல் டெக் 1.61

ரிலையன்ஸ் 1.53

ஆக்ஸிஸ் பேங்க் 1.17

பவா் கிரிட் 1.14

டெக் மகேந்திரா 1.11

என்டிபிசி 1.07

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com