இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் நிகர லாபம் ரூ.137 கோடி

வங்கி சாரா நிதி நிறுவனமான இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் நிகர லாபம் மாா்ச் காலாண்டில் ரூ.137 கோடியாக இருந்தது.
இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் நிகர லாபம் ரூ.137 கோடி

வங்கி சாரா நிதி நிறுவனமான இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் நிகர லாபம் மாா்ச் காலாண்டில் ரூ.137 கோடியாக இருந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,954 கோடியாக இருந்தது. இது, 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.4,344 கோடியுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும்.

நிகர லாபம் ரூ.1,006 கோடியிலிருந்து 86 சதவீதம் சரிந்து ரூ.137 கோடியானது.

மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த முழு நிதியாண்டில் நிகர வருமானம் பாதியாக குறைந்து ரூ.2,200 கோடியானது.

நிறுவனத்தின் இருப்புநிலை குறிப்பு (பேலன்ஸ் சீட்) ரூ.1,25,000 கோடியிலிருந்து ரூ.1,02,872 கோடியாக குறைந்துள்ளது.

2020 மாா்ச் 31 நிலவரப்படி நிறுவனத்தின் கடன் வழங்கல் 69,676 கோடியாக இருந்தது. இது, 2019 மாா்ச் இறுதியில் ரூ.91,530 கோடியாக காணப்பட்டது என இந்தியாபுல்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com