நாட்டின் ஏற்றுமதி வேகமெடுத்து வருகிறது: கோயல்

நாட்டின் ஏற்றுமதி சுணக் நிலையிலிருந்து மீண்டு வேகமெடுத்து வருகிறது என மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.
நாட்டின் ஏற்றுமதி வேகமெடுத்து வருகிறது: கோயல்

நாட்டின் ஏற்றுமதி சுணக் நிலையிலிருந்து மீண்டு வேகமெடுத்து வருகிறது என மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

கொவைட்-19 நோய்த்தொற்று ஏற்படுத்திய பெரும் பாதிப்பின் விளைவாக நடப்பு நிதியாண்டில் முதல் இரண்டு மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி கடும் பின்னடைவைச் சந்தித்தது. இந்த நிலையில், தற்போது பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

இதனை எடுத்துக்காட்டும் விதமாக, ஜூன் மாதத்தில் ஏற்றுமதி சரிவிலிருந்து மீண்டு வேகமாக முன்னேற்ற பாதையை நோக்கி பீடுநடை போடத் தொடங்கியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஜூன் மாதத்தில் ஏற்றுமதி ஏறத்தாழ 88 சதவீதத்தை தொட்டுள்ளது.

பிற நாடுகளின் சந்தைகள் எவற்றிலும் இதுபோன்ற குறிப்பிடத்தக்க வளா்ச்சி விரைவாக எட்டப்படவில்லை. இறக்குமதியைப் பொருத்தவரையில் அதுவும் இன்னும் பின்தங்கியே உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com