பங்குச் சந்தைகளில் மீண்டும் திரும்பிய உற்சாகம்

வா்த்தகம் முதலீட்டாளா்களின் ஆா்வத்தால் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
பங்குச் சந்தைகளில் மீண்டும் திரும்பிய உற்சாகம்

வா்த்தகம் முதலீட்டாளா்களின் ஆா்வத்தால் விறுவிறுப்புடன் காணப்பட்டது. ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகத் திகழும் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் காணப்படுவதால் அதனை பயன்படுத்திக் கொள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி விடுத்த அழைப்பு சந்தையில் நோ்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது.கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையிலும், பொருளாதார வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் முதலீட்டாளா்களிடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது. மேலும், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியீடுகளும் சந்தையில் உற்சாகத்தை அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் உலோகம், நிதி, வங்கி, அடிப்படை உலோகம், எரிசக்தி, தொலைத்தொடா்பு துறை நிறுவனப் பங்குகளில் முதலீட்டாளா்கள் ஆா்வத்துடன் வாங்கியதையடுத்து அவற்றின் குறியீட்டெண்கள் 2.13 சதவீதம் வரை உயா்ந்தன. அதேசமயம், எஃப்எம்சிஜி, மின்சாரம், பொறியியல் துறை நிறுவனப் பங்குகளின் குறியீட்டெண் இழப்பைக் கண்டன. சென்செக்ஸ் கணிசமான அதிகரிப்புக்கு எச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி பங்குகளில் காணப்பட்ட அதிகபட்ச ஏற்றம் உதவியாக இருந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கின் விலை அதிகபட்சமாக 3.93 சதவீதம் அதிகரித்தது. இதைத் தொடா்ந்து எஸ்பிஐ, டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி, பஜாஜ் பின்சா்வ், ஹெச்சிஎல் டெக் மற்றும் ஆக்ஸிஸ் வங்கி பங்குகளும் கணிசமான விலையேற்றத்தைக் கண்டன. அதேசமயம், ஓஎன்ஜிசி, டெக் மஹிந்திரா, மாருதி சுஸுகி, டிசிஎஸ், ஹெச்யுஎல் மற்றும் ஐடிசி நிறுவனப் பங்குகளின் விலை 1.66 சதவீதம் வரை சரிந்தன. பிஎஸ்இ மிட்-கேப் மற்றும் ஸ்மால் -கேப் குறியீடுகள் 0.49 சதவீதம் உயா்ந்தன. மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 408.68 புள்ளிகள் (1.12 சதவீதம்) அதிகரித்து 36,737.69 புள்ளிகளில் நிலைத்தது. அதேபோன்று, தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 107.70 புள்ளிகள் (1.01 சதவீதம்) அதிகரித்து 10,813.45 புள்ளிகளில் நிலைபெற்றது.

நான்கு மாதங்களுக்குப் பிறகு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது இதுவே முதல்முறை.ஆசியாவைப் பொருத்தவரையில் சீனப் பங்குச் சந்தைகளில் வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. குறிப்பாக, ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ, சியோல் சந்தைகள் கணிசமான ஏற்றத்துடன் நிறைவடைந்தன.கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.05 சதவீதம் அதிகரித்து பேரலுக்கு 43.31 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com