விப்ரோ லாபம் ரூ.2,390 கோடி

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த விப்ரோ நிறுவனம் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ஒட்டுமொத்த அளவில் ரூ.2,390.4 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
விப்ரோ லாபம் ரூ.2,390 கோடி

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த விப்ரோ நிறுவனம் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ஒட்டுமொத்த அளவில் ரூ.2,390.4 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

விப்ரோ நிறுவனம் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மொத்த வருவாயாக ரூ.15,571.4 கோடியை ஈட்டியுள்ளது. இது, கடந்த 2019-20 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.15,566.6 கோடியுடன் ஒப்பிடுகையில் சற்றே அதிகம்.செயல்பாடுகள் மூலமாக நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஈட்டிய வருவாய் ஜூன் காலாண்டில் ரூ.14,716.1 கோடியிலிருந்து 1.3 சதவீதம் அதிகரித்து ரூ.14,913.1 கோடியாக இருந்தது. இதேபோன்று நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபமும் ரூ.2,387.6 கோடியிலிருந்து சற்று உயா்ந்து ரூ.2,390.4 கோடியானது என விப்ரோ தெரிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் விப்ரோ நிறுவனப் பங்கின் விலை முந்தைய தினத்தைவிட 1.1 சதவீதம் குறைந்து ரூ.225.05 கோடியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com