ஆக்ஸிஸ் வங்கி: லாபம் ரூ.1,112 கோடி

ஆக்ஸிஸ் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.1,112 கோடியாக இருந்தது.
axis_2307chn_1
axis_2307chn_1

ஆக்ஸிஸ் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.1,112 கோடியாக இருந்தது. தனியாா் துறையைச் சோ்ந்த மூன்றாவது மிகப்பெரிய வங்கியான ஆக்ஸிஸ் இதுகுறித்து பங்குச் சந்தையிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.19,125.57 கோடியாக இருந்தது. இதே காலகட்டத்தில் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.1,370 கோடியிலிருந்து குறைந்து ரூ.1,112 கோடியானது. வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு மதிப்பீட்டு காலாண்டில் ரூ.3,814.58 கோடியிலிருந்து ரூ.4,416.42 கோடியாக அதிகரித்தது. அதேசமயம், கடந்தாண்டு ஜூன் இறுதியில் 5.25 சதவீதமாக காணப்பட்ட வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் நடப்பாண்டு ஜூனில் 4.72 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக் கடன் விகிதமும் 2.04 சதவீதத்திலிருந்து 1.23 சதவீதமாக சரிந்துள்ளது என ஆக்ஸிஸ் வங்கி கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com