பிஎன்பி ஹவுஸிங்: லாபம் ரூ.257.2 கோடி

பிஎன்பி ஹவுஸிங் பைனான்ஸ் ஜூன் காலாண்டில் ரூ.257.2 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
பிஎன்பி ஹவுஸிங்: லாபம் ரூ.257.2 கோடி

பிஎன்பி ஹவுஸிங் பைனான்ஸ் ஜூன் காலாண்டில் ரூ.257.2 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பிஎன்பி ஹவுஸிங் பைனான்ஸ் ரூ.257.2 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய 2019-20 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.284.5 கோடி நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் குறைவாகும். ஏப்ரல்-ஜூன் காலாண்டில், நிறுவனத்தின் நிகர வட்டி வருவாயும் ரூ.625.5 கோடியிலிருந்து 22 சதவீதம் சரிந்து ரூ.487.8 கோடியானது. மொத்தம் வருமானம் ரூ.2,232.58 கோடியிலிருந்து ரூ.1,872.33 கோடியாக குறைந்தது. ஜூன் 30 நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த கடன் ரூ.67,283 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் காணப்பட்ட அளவான ரூ.72,261 கோடியுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் குறைவாகும். இருப்பினும், டெபாசிட் ரூ.15,446 கோடியிலிருந்து 5 சதவீதம் உயா்ந்து ரூ.16,203 கோடியானது என பிஎன்பி ஹவுஸிங் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com