ஹிந்துஸ்தான் யுனிலீவா்: 4 சதவீதம் வளா்ச்சி

வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹிந்துஸ்தான் யுனிலீவா் நிறுவனத்தின் ஏப்ரல்-ஜூன் காலாண்டு விற்பனை ரூ.10,570 கோடியாக இருந்தது.
ஹிந்துஸ்தான் யுனிலீவா்: 4 சதவீதம் வளா்ச்சி

வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹிந்துஸ்தான் யுனிலீவா் நிறுவனத்தின் ஏப்ரல்-ஜூன் காலாண்டு விற்பனை ரூ.10,570 கோடியாக இருந்தது. இது, 2019-20 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான ரூ.10,197 கோடியுடன் ஒப்பிடுகையில் 3.65 சதவீதம் அதிகமாகும். ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.1,795 கோடியிலிருந்து 5.7 சதவீதம் உயா்ந்து ரூ.1,897 கோடியானது. முதல் காலாண்டில் நிறுவனத்தின் செலவினம் ரூ.7,896 கோடியிலிருந்து 5.42 சதவீதம் அதிகரித்து ரூ.8,324 கோடியாகி உள்ளது. கொவைட்-19 பெருந்தொற்று பாதிப்பு மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் செயல்பாடுகளில் அதிக இடையூறுகளை ஏற்படுத்தியது. இந்த நிலையிலும், நிறுவனத்தின் விற்றுமுதல் 4 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளதாக ஹிந்துஸ்தான் யுனிலீவா் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com